அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு 5 ஆயிரம் ரூபா ஊக்குவிப்புக் கொடுப்பனவு!

Thursday, February 23rd, 2017

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு 5 ஆயிரம் ரூபா ஊக்குவிப்புக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

அறநெறிப் பாடசாலைகளுக்கான நூலக கொடுப்பனவையும் அறநெறி ஊக்குவிப்பு கொடுப்பனவையும் ஒன்றிணைத்து வழங்குவதற்காக நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சமர்ப்பிதிருந்த ஆவணத்தி;ற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

இதற்கமைய, புத்தசாசன அமைச்சு மற்றும் பௌத்த அலுவல்கள் திணைக்களத்தின் ஊடாக அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கு 5 ஆயிரம் ரூபா வருடாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்க அனுமதி கிடைத்திருப்பதாக புத்தசாசன அமைச்சு அறிவித்துள்ளது.

IMG_8455

Related posts: