அரியாசனத்தில் அமர்ந்த அந்த நபர் யார்?

Saturday, November 19th, 2016

நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் ஆசனமான அரியாசனத்தில் அமர்ந்த நாடாளுமன்றத்தில் பொறியியலாளராக பணியாற்றும் அதிகாரி தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த 16ம் திகதி புதன்கிழமை சபையமர்வு நிறைவடைந்ததன் பின்னர் குறித்த நபர் சபாநாயகரின் அரியாசனத்தில் அமர்ந்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிஹார சபாநாயகரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

அதன்படி இந்த சம்பவம் தொடர்பாக ஆராய்ந்து பார்க்குமாறு சபாநாயகரினால் பாராளுமன்ற செயலாளருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

n-parliament

Related posts: