அரிசி கொள்வனவில் 4 இலட்சத்து .93 ஆயிரம் ரூபா மோசடி செய்தவருக்கு விளக்க மறியல்!
Thursday, December 22nd, 2016மருதனார்மடம் பகுதியில் உள்ள அரிசி ஆலையில் 4இலட்சத்து 93ஆயிரத்து 700ரூபா காசோலை மோசடியில் ஈடுபட்ட அளவெட்டியை சேர்ந்த 33 வயதுடைய நபரை எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்ற பதில் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இணுவில் பகுதியைச் சேர்ந்த நபரொருவர் மருதனார் மடத்தில் அரிசி ஆலை நடத்தி வருகின்றனர். இவரிடம் அளவெட்டியைச் சேர்ந்த மேற்படி நபர் அரிசி கொள்வனவு செய்துள்ளார். அதற்காக 4லட்சத்து 93ஆயிரத்து 700ரூபாவிற்கு பெறுமதியான 7 காசோலைகளை வழங்கியுள்ளார். வழங்கப்பட்ட காசோலைகள் குறித்த நபரின் வங்கிக்கணக்கில் பணம் இல்லாததால் திரும்பியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட நபர் அரிசி கொள்வனவு செய்தவரிடம் பணத்தினை தருமாறு கோரியுள்ளார். பணத்தை தராமால் குறித்த நபர் இழுத்தடிப்பு செய்துள்ளார். இதனால் அரிசி ஆலை உரிமையாளர் மீது சுன்னாகம் பொலிஸிடம் செய்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மோசடியில் ஈடுபட்ட நபரை நீதிமன்றில் நேற்று முற்படுத்தினார். முற்படுத்தியபோதே அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
Related posts:
|
|