அரநாயக்கவில் 25 சடலங்கள் மீட்பு!

Monday, May 23rd, 2016
மண்­ச­ரிவு ஏற்­பட்ட அர­நா­யக்க பகு­தியில் இது­வ­ரையில் 25 சட­லங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு, 138 பேர் காணாமல்போயுள்ளதா­கவும் தேடுதல் பணிகள் தொடர்ந்தும் இடம்­பெற்று வரு­வ­தா­கவும் தெரி­வித்­துள்ள அர­சாங்கம், கொழும்பில் தேங்­கிக்­கி­டக்கும் குப்பைகளை அகற்ற விசேட திட்­ட­மொன்றை முன்­னெ­டுக்க ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பணிப்­புரை விடுத்துள்­ள­தா­கவும் தெரி­வித்­தது.

கொழும்பில் இடர் முகா­மைத்­துவ அமைச்சில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அரசு இதனைத் குறிப்­பிட்­டுள்­ளது.

இங்கு உரை­யாற்­றிய இடர் முகா­மைத்­துவ அமைச்சர் அநுர பிரி­ய­தர்­ஸன யாப்பா –

மழை வெள்ளம் தற்­போது குறைந்­துள்­ளது. நீர் வழிந்­தோட ஆரம்­பித்­துள்­ள­தோடு, களனி கங்கையிலும் நீர்­மட்டம் குறைந்­துள்­ளது. இந்­நி­லையில் மழை வெள்ளத்தால் பாதிக்­கப்­பட்ட 4 இலட்சம் மக்­களின் தொகையும் 3 இலட்­ச­மாக குறைந்­துள்­ளது. 600 இடைத்­தங்கல் முகாம்கள் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­காக ஏற்­ப­டுத்­தப்­பட்­டன. அம் முகாம்­களின் தொகை 300 ஆக குறைந்­துள்­ளது.

பெரும்­பா­லான மக்கள், வெள்ளம் குறைந்து வரும் நிலையில் தத்­த­மது வீடு­க­ளுக்கு செல்ல ஆரம்பித்­துள்­ளனர். பாதிக்கப்­பட்ட மக்­க­ளுக்கு தேவை­யான உணவு வழங்­கப்­ப­டு­கி­றது. உலர் உணவுப் பொருட்­களும் தேவை­யான அளவு உள்­ளது. வெ ளிநா­டு­க­ளி­லி­ருந்தும் நிவா­ரணப் பொருட்கள் கிடைத்­துள்­ளன. தற்­போது பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு உடை, தலை­யணை, பெட்சீட், மெத்தை போன்ற பொருட்­களே தேவைப்­ப­டு­கி­றன.

அர­நா­ய­காவில் 25 பேர் மர­ண­ம­டைந்­துள்­ளனர், 138 பேர் காணாமல் போயுள்­ளனர். காணாமல் போனோரை தேடும் பணிகள் தொடர்­கின்­றன. முப்­ப­டை­யி­னரும் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்டு வருகின்­றனர்.

இவ்­வாறு மீட்புப் பணிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் பிர­தே­சங்­க­ளுக்கு மக்கள் பார்­வை­யிடச் செல்வதை தவிர்க்க வேண்டும். இவ்­வாறு மக்கள் செல்­வதால் மீட்புப் பணி­களில் ஈடு­ப­டுவோர் நெருக்­க­டி­களை எதிர்­நோக்­கு­கின்­றன. அத்­தோடு மழை வெ ள்ளத்தால் முற்­றாக சேத­ம­டைந்த வீடுக­ளுக்கும் ஒரு பகுதி சேத­ம­டைந்த வீடு­க­ளுக்கும் செல்­வதை மக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

மழை வெள்­ளத்தால் கொழும்பு நகரில் குப்­பைகள் குவிந்து கிடக்­கின்­றன. குப்­பை­களை கொட்டும் மீதொட்­ட­முல்லை பகு­தியில் வெள்ளம் ஏற்­பட்­டுள்­ளதால் குப்பை லொறிகள் அங்கு செல்ல முடியாது. இது தொடர்பில் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளதோடு கொழும்பில் குப்பைகளை வெளியேற்ற விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதோடு, அதற்கான பணிப்புரைகளையும் ஜனாதிபதி விடுத்துள்ளார் என்றும் அமைச்சர் அநுரபிரியதர்ஸன யாபா குறிப்பிட்டார்.

12 copy

Related posts: