அரச வைத்தியர்களின் பெற்றோர் வீதியில் இறங்கி போராட்டம்!

Sunday, August 21st, 2016

மாலபே மருத்துவக் கல்லூரிக்கு எதிராக அரச வைத்திய பீட மாணவர்களின் பெற்றோர் நாடளாவிய ரீதியில் போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர்.

இன்று பகல் நாடுபூராகவுமுள்ள 13 பாடசாலைகளில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் ,இதன்போது மாலபே மருத்துவக் கல்லூரியை இரத்துச் செய்யுமாறு அவர்கள் அரசாங்கத்திடம் வலியுறுத்தினர் எனவும் செய்திகள் கூறுகின்றன.

இதேவேளை இது தொடர்பில் கொழும்பை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட போராட்டம் லிப்டன் சுற்றுவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது.  மேலும் கேகாலை, இரத்தினபுரி, கம்பஹா, காலி, ஹம்பாந்தோட்டை, பதுளை, அனுராதபுரம், புத்தளம் போன்ற இடங்களிலும் இந்த போராட்டம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


நயினாதீவு அம்மன் விவகாரம் தொடர்பிழல் பிரதமரின் அவசர உத்தரவையடுத்து தொடர்புடைய படையினரிடம் விசாரணை!
நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 584 பேருக்குக் கொரோனா தொற்று – 1325 மரணங்களும் பதிவு – சுகாதார அமைச்சு தக...
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் எதிர்வரும் நாட்களில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் - சி...