அரச நிறுவனங்களால் 11 ஆயிரம் கோடி நட்ஷ்டம்! – நாடாளுமன்றில் அறிக்கை சமர்ப்பிப்பு!

அரச நிறுவனங்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் கோப் எனப்படும் பொது முயற்சியாண்மை குறித்த நாடாளுமன்ற தெரிவுக்குழு, தமது மூன்றாவது விசாரணை அறிக்கையை நேற்று (புதன்கிழமை) நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளது.
கோப் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்னெத்தி குறித்த அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, துறைமுக அதிகாரசபை, ரூபாவாஹினி கூட்டத்தாபனம் மற்றும் தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு உள்ளிட்ட 15 அரச நிறுவனங்கள் தொடர்பில் கடந்த 2016ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதிவரை கோப் குழு விசாரணை நடத்தியிருந்தது.
குறித்த விசாரணையின் அடிப்படையில் இந் நிறுவனங்களால் 11 ஆயிரம் கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக கோப் குழு தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது
Related posts:
அரசாங்கம் ஆயத்தமாக இருக்கவில்லை என குற்றச்சாட்டு!
தேர்தல் சட்டமீறல்கள் வீடியோவாக நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும் – பொலிஸ் தெரிவிப்பு!
ஆயிரம் தேசிய பாடசாலைகள் வேலைத்திட்டம் இலவசக் கல்வி வரலாற்றின் மைல்கல் - கல்வி அமைச்சர் தினேஷ் குணவர...
|
|