அரச சொத்துகளுக்கு சேதம் விளைவித்த மூவர் விளக்கமறியலில்!

Thursday, September 15th, 2016

அரச சொத்துகளுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள், யாழ் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தபடுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 19 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாழ் நீதவான் எஸ்.சதீஸ்தரன் முன்னிலையில் சந்தேக நபர்களை ஆஜர்படுத்தியதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்டமைக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்ற கட்டடத்திற்கு சேதம் விளைவித்ததுடன், சிறைச்சாலை பஸ் மற்றும் வாகனங்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு கட்டம் கட்டமாக பிணை வழங்கப்பட்டிருந்து.

இதனை அடுத்து சம்பவம் தொடர்பில் நேற்று முந்தினம் யாழ் நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் பின்னர் , மன்றில் ஆஜராகிய சந்தேகநபர்களில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Prisoner-in-jail-cell-prison-626x380

Related posts: