அரச சேவை அதிகாரிகளுக்கு ஆப்பு வைத்த தீர்ப்பு – உதய கம்மன்பில

முழு அரச சேவையையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வழக்கு தீர்ப்பொன்றை கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட மகிந்த ராஜபக்சவுக்கு பிரசாரம் செய்யும் வகையில் தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவுக்கு சொந்தமான 600 மில்லியன் ரூபா பணத்தை பயன்படுத்தி சில் துணிகள் விநியோகிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு மேல் நீதிமன்றம் வழங்கிய தண்டனை குறித்து கருத்து வெளியிடும் போதே கம்மன்பில இதனை கூறியுள்ளார்.
இந்த வழக்கில் லலித் வீரதுங்கவுக்கு எதிராக எந்த இடத்திலும் குற்றம் சுமத்தப்படவில்லை.லலித் வீரதுங்க போன்ற சிரேஷ்ட அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ள தலைவிதி இதுவாக இருக்கும் போது தமது தலைவிதி எப்படி இருக்குமோ என்று அரச அதிகாரிகள் அச்சத்தில் உள்ளனர்.நாட்டின் முழு நிர்வாகத்துறையையும் தலைகீழாக மாற்றும் தீர்ப்பாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.இதன் பின்னர் அரசாங்கத்தின் கடிதங்களில் அரச ஊழியர்களின் கையெழுத்தை பெற்றுக்கொள்வது ஆபத்தான ஒன்றாக மாறிவிடும்.மேலும் இந்த தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யப்படும் எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|