அரசியல் பிரச்சினையாக உருவெடுக்கும் மீனவர் பிரச்சினை!- துணைத் தூதர் ஏ.நடராஜன்

நீண்டகாலமாக தொர்ந்துகொண்டிருக்கும் இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு, இரு நாடுகளின் மீனவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி, மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்று இலங்கைக்கான இந்திய துணைத் தூதர் ஏ.நடராஜன் தெரிவித்துள்ளார்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற, துணைத் தூதருக்கான வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்த உரையாற்றியவர்-
இந்தியாவைப் பற்றிய வெளிநாடுகளின் பார்வை, தற்போது மாறியுள்ளது.இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை அரசியல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இலங்கைக் கடற்படையால் சிறை பிடிக்கப்படும் தமிழக மீனவர்களை, யாழ்ப்பாணம், வவுனியா சிறைகளில்தான் அடைப்பார்கள். அவர்களுக்கு நாங்கள் உதவிகளைச் செய்தாலும், அவர்களது துன்பங்களைப் பார்க்கும்போது வேதனையாக உள்ளது. எனவே, இரு நாடுகளின் மீனவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி, மனிதாபிமான அடிப்படையில் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|