அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ள விசேட அறிக்கை!

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளிக்கப்படவுள்ளது.
மூன்று தொகுதிகளாகவுள்ள குறித்த விசாரணை அறிக்கை 2 ஆயிரம் பக்கங்களை கொண்டுள்ளது.
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட 198 முறைப்பாடுகளின் விபரங்களும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது.
அந்த ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாடாளுமன்றில் மோதியவர்களை நீக்கவேண்டும் - சட்டத்தரணிகள் சங்கம்
வடக்கிலிருந்து தமிழகத்துக்கு கப்பல் சேவை!
இரு நாட்டு மக்களுக்கிடையே நெருங்கிய உறவுகளை பேணுவதே ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் நோக்கம் – இந்திய ப...
|
|