அரசியல் பழிவாங்கல்கள் குறித்த பரிந்துரைகளை அமுலாக்குவதற்கு விஷேட குழு நியமனம்!

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் பரிந்துரைகளை அமுலாக்குவதற்கு மூவர் அடங்கிய விசேட ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் கீழ் நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழு தொடர்பான விபரம் வர்த்தமானியின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விசேட குழுவில் உயர் நீதிமன்ற நீதியரசர்களான தம்மிக்க பிரியந்த சமரகோன் ஜயவர்தன, ஹேமா குமுதினி மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ரத்னபிரிய குருசிங்க ஆகியோர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தமது பாதுகாப்பை பொதுமக்கள் தாமே உறுதி செய்ய வேண்டும் - பொலிஸ் அதிகாரி!
இரு தினங்களில் விசேட வர்த்தமானி வெளிவரும் - சுகாதார அமைச்சர் பவித்ராவன்னி ஆரச்சி தெரிவிப்பு!
பூஸ்டர் தடுப்பூசியின் செயற்றிறன் எதிர்பார்க்கும் மட்டத்தை அடையும் பட்சத்தில், முகக்கவசம் அணிவதை தவிர...
|
|