அரசியல் கைதிகளிற்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்!

Monday, September 24th, 2018

அரசியல் கைதிகளிற்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இன்று (24) முன்னெடுக்கப்பட்டது.

யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்பாக இன்று காலை (24)  அடையாள உண்ணாவித போராட்டம் ஆரம்பமாகியது.

அரசியல் கைதிகளின் பெற்றோர் உறவினர்கள் வெகுஜன அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஆகியன இணைந்து முன்னெடுத்துள்ளனர்.

அரசியல் கைதிகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்களைக் குறுகிய கால புனர்வாழ்வு வழங்கி விரைவில் விடுவிக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த வெள்ளிக்கிழமையில் (14) இருந்து அனுராதபுரம் சிறைச்சாலையில் ஒன்பது நாட்களையும் தாண்டி உண்ணாவிரதம் இருந்துவருகின்ற அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென்பதை வலியுறுத்தி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அடையாள உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்துள்ளார்கள்.

வருடக்கணக்காக முறையான விசாரணையோ அல்லது விடுதலையோ இல்லாமல் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் உயிர்களைக் காக்கவேண்டும்இ அனைத்து அரசியல் கைதிகளையும் பொது மன்னிப்பின் அடிப்படையில் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை விலக்கிக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளை இச் சந்தர்ப்பத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

Related posts: