அரசியலில் ஈடுபடுவது தொடர்பாக  தீர்மானிக்கவில்லை -தில்ஷான்!

Monday, August 29th, 2016

கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்றுள்ள திலக்கரட்ன தில்ஷான் தான் அரசியல் ஈடுபட எந்த தீர்மானத்தையும் இதுவரை எடுக்கவில்லை எனக் கூறியுள்ளார்.

தம்புள்ளையில் நேற்று நடைபெற்ற கிரிக்கெட் போட்டி முடிவடைந்த பின்னர் நடத்திய ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

குடும்பத்துடன் நேரத்தை செலவிட உள்ளதாகவும் மேலும் பணிச் சுமையை அதிகரித்துக்கொள்ள விரும்பவில்லை எனவும் திலக்கரட்ன தில்ஷான் கூறியுள்ளார்.

Related posts: