அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு – ஜே.வி.பி.!

625.147.560.350.160.300.053.800.264.160.90 Friday, April 21st, 2017

மீதொட்டமுல்ல அனர்த்தத்திற்கு அரசாங்கம் பொறுப்பு சொல்ல வேண்டும் எனத் தெரிவித்து, குற்றவியல் சட்டம் 298ன் அடிப்படையில் அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பி. கட்சி வழக்குத் தொடரத் தீர்மானித்துள்ளது.

வழக்குத் தொடர்வது குறித்து சட்டத்தரணிகளுடன் ஆலோசிக்கப்பட்டு வருவதாக மேல் மாகாணசபை உறுப்பினர் சுனில் வடகல தெரிவித்துள்ளார்.பத்தரமுல்லவில் அமைந்துள்ள கட்சியின் தலைமையக் காரியாலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

மீதொட்டமுல்ல அனர்த்தம் ஒர் இயற்கை அனர்த்தமல்ல அது ஓர் கொலையாகும்.மாநகரசபை கட்டளைச் சட்டத்தின் 129ம் சரத்தின் பிரகாரம் நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதியில் குப்பைகளை சேகரிப்பது மாநகரசபையின் கடமையாகும்.

நகரசபை நிர்வாகத்தின் கவனக்குறைவினால் இவ்வாறு அனர்த்தம் நேர்ந்துள்ளது. எனவே அரசாங்கத்தின் எதிராக குற்றவியல் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும்.

குப்பை மேட்டின் அபாயம் குறித்து ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அதனை நகரசபை நிர்வாகமும் அரசியல்வாதிகளும், அனர்த்த முகாமைத்துவ அமைச்சும் உதாசீனம் செய்துள்ளதாக சுனில் வட்டகல குற்றம் சுமத்தியுள்ளார்.


இலங்கையின் புதிய பொலிஸ் மா அதிபராகப் பதவியேற்றுள்ள  பூஜித ஜயசுந்தர நல்லூரில் விசேட பூஜை வழிபாடுகளிலு...
வாசிப்பு மாதத்தையொட்டி மாணவரிடையே போட்டிகள்!
கைதான இலங்கை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை - நீரியல் வள அமைச்சு!
தேர்தல் பிற்போவதற்கான பொறுப்பை பசில் ஏற்க வேண்டும் - அமைச்சர் பைசர்!
பாஷையூர் புனித அந்தோனியார் ஆலய தேர் பவனி இன்று!
32861036_1770611652977914_7456190262398681088_n

சாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி  ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..!