அரசஊழியர்களுக்கான தடுப்பூசிக்கு அமைச்சரவையின் அனுமதி கோரப்பட்டுள்ளது – அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவிப்பு!

அரசாங்க ஊழியர்களிற்கு கொரோனாவைரஸ் தடுப்பூசியை வழங்குவதற்கு அமைச்சரவையின் அனுமதியை கோரியுள்ளதாக அமைச்சர் ஜனகபண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
கொவிட் பெருந்தொற்றின் போது அரச சேவையின் முக்கியத்துவம் அதிகளவு உணரப்பட்டது என தெரிவித்துள்ள அமைச்சர் கொவிட் அச்சுறுத்தல் காணப்படுகின்ற போதிலும் அரசாங்க ஊழியர்கள் தங்கள் சேவைகளை தொடர்கின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் முன்கூட்டியே சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுத்தோம்,அவர்கள் குறித்து நாங்கள் கொண்டுள்ள கரிசனையே இதற்கு காரணம் எனவும் அமைச்சர் தெரிவி;த்துள்ளார்.
Related posts:
யாழ்.மாநகரசபை குடிதண்ணீர் சேவை கட்டண அறவீடு!
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கும் திருத்த உடன்படிக்கைக்கு அமைச்சரவை அனுமதி
நாடு முடக்கப்படுவது தொடர்பில் இறுதித் தீர்மானம் நாளை வெளியாகும் என எதிர்பார்ப்பு!
|
|