அம்பாறைமாவட்டத்தில் வீசியசூறாவளியால் ஏழு வீடுகள் சேதம்!

Wednesday, June 7th, 2017

கிழக்குமாகாணத்தின் அம்பாறைமாவட்டத்தில்வீசியசூறாவளிகாரணமாக ஏழு வீடுகள் சேதமடைந்துள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது. அம்பாறை மாவட்டத்தின் 18 வதுகொலனிப் பகுதியிலுள்ள ஏழு வீடுகள் நேற்றையதினம் வீசியசூறாவளியால் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அவ்வீடுகளில் வசித்தமக்கள் நிர்க்கதியானநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதனிடையேஅங்கிருந்தவர்த்தகநிலையங்கள் சிலவும் பாதிப்பைஎதிர்கொண்டதாகவும், இதனால் வர்த்தகர்களுக்கும் பெருநட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில்பாதிக்கப்பட்டதமக்குஉரியஉதவிகளைப் பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் மக்களும், வர்த்தகர்களும் துறைசார்ந்தவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: