அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல வாபஸ்!

Friday, May 20th, 2016

தேர்தல் ஒன்றுக்கான அல்லது மக்கள் தீர்ப்பொன்றுக்கான காலத்தின்போது இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் பின்பற்ற வேண்டிய ஒழுக்க நெறிகள் தொடர்பானவற்றை  அரசாங்கம் வாபஸ் பெற்றுக் கொண்டது.

இப் பிரேரணை இன்று வெள்ளிக்கிழமை காலையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இதனை சபை முதல்வரும், அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல வாபஸ் பெற்றுக் கொண்டார்.

இலங்கை அரசியலமைப்பின் 104 ஆம் (5) ஆம் உறுப்புரிமையின் பிரகாரம் தேர்தல் ஆணைக்குழுவினால் 2016 ஆம் ஆண்டு பெப்ரவிரி மாதம் 25 ஆம் திகதி 1955/19 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமாணியில் பிரசுரிக்கப்பட்டபோதும், 2016.05.06 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது.

மக்கள் தீர்ப்பொன்றுக்கான அல்லது தேர்தல் ஒன்றுக்கான காலத்தின்போது இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் பின்பற்ற வேண்டிய ஒழுக்க நெறிகள் அல்லது வழிகாட்டு முறைமைகள் அங்கிகரிக்கப்பட வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றதென இன்று வெள்ளிக்கிழமை ஒழுக்குப் பத்திரத்தில் பிரேரணை முன்வைத்து கொடுக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் இதனை  சபையில் சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் கருஜயசூரிய பணித்த போதே சபை முதல்வரும், அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல அதனை சமர்ப்பிக்கவில்லையென கூறி வாபஸ் பெற்றார்.

Related posts: