அமைச்சர் மனோ கணேசன் வியட்நாம் விஜயம்!

Saturday, April 15th, 2017

தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர், மனோ கணேசன் வியட்நாமுக்கு இன்றிரவு பயணமானார்.

தற்போது ஜப்பான் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியா சென்று அங்கிருந்து வியட்நாமிம் செல்ல உள்ளார். வியட்நாமில் உத்தியோகப்பூர்வ பயணத்தை, ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கும் பிரதமரின் தூதுக்குழுவில், அமைச்சர் மனோ கணேசனும் இணைந்து கொள்வார்.

வியட்நாமில் இருந்து நாடு திரும்பும் வழியில் மலேசியா சென்று அங்கு வாழ்கின்ற தமிழர்கள்  ஏற்பாடு செய்துள்ள நிகழ்வுகளிலும், அமைச்சர் மனோ கணேசன் கலந்துக்கொள்ள உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் முஹமத் முசாம்மில் மேற்கொண்டுள்ளார்.

Related posts: