அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு அறிக்கை விக்னேஸ்வரனிடம்

Monday, May 22nd, 2017

வடமாகாண அமைச்சர்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட ஊழல் குற்றச் சாட்டுக்கள் தொடர்பான விசாரணை அறிக்கை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணை அறிக்கை வடமாகாண முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட இரு ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் ஓர் ஓய்வு பெற்ற மாவட்ட அரச அதிபர் தலமையிலான மூவர் அடங்கிய குழுவினரால் கையளிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண அமைச்சகளிற்கு எதிராக எழுந்த ஊழல்  குற்றச்சாட்டுக்களை அடுத்து குறித்த அமைச்சர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த விசாரணையில் சகல அமைச்சிற்கும் எதிரான குற்றச்சாட்டுக்களை குறித்த குழுவினரிடம் முன்வைக்கலாம் என முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.இவ்வாறு நியமிக்கப்பட்ட குழுவினரிடம் 4 அமைச்சர்கள் தொடர்பாக  மொத்தமாக 32 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

முறைப்பாடுகளில் அதிகமானவை நிர்வாக ரீதியிலான முரண்பாடுகளும், நியமனம் சார்பான பதவி விடயங்களும் உள்ளடக்கப்படுகின்றன.அத்துடன்,   நிதி தொடர்பாக 12 முறைப்பாடுகளும் காணப்படுகின்றன.

Related posts: