அமைச்சரவை அனுமதியுடன் காணி ஆணையாளர் பணி நீக்கம்!

அமைச்சரவை அனுமதியுடன் காணி ஆணையாளர் ஆர்.பீ.ஆர் ராஜபக்ஷவை பணி நீக்கம் செய்ய காணி அமைச்சர் ஜோன் அமரதுங்க யோசனை ஒன்றை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.
காணி ஆணையாளருக்கு எதிராக தொடர்ச்சியாக செய்யப்பட்டு வரும் முறைப்பாடுகளைத் தொடர்ந்து குறித்த இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் காணி ஆணையாளர் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளனர்.
காணி ஆணையாளர் ஒருவரை நியமிக்கும் வரையில் இடைக்கால அடிப்படையில் பணியை முன்னெடுக்க ஒருவரை நியமிக்க உள்ளதாக காணி அமைச்சர் ஜோன் அமரதுங்க ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
எமக்கு பதவி வேண்டும் -கூட்டு எதிர்கட்சி!
சுன்னாகத்தில் வாள்வெட்டு: மூவருக்கு விளக்கமறியல்
போலி பேஸ்புக் கணக்குகள் குறித்து அதிகரித்த முறைப்பாடு!
|
|