அமெரிக்க வான்படை அம்பாறையில் பொதியிறக்கம்!

Monday, September 18th, 2017

அமெரிக்க வான்படையின் பசுபிக் பிராந்திய வான் படையினருடன் இணைந்து ஸ்ரீலங்கா வான்படை மேற்கொள்ளப்படும் ”பசுபிக் எயார்லிப்ட் ரெலி – 2017” இம்முறை இலங்கையின் நீர் கொழும்பு ஜெட்வின் ஹோட்டலில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வு இம்மாதம் 11 ம் திகதியிலிருந்து 15 ம் திகதி வரை நடைபெற்றிருந்தது.

இலங்கை வான்படையின் முகாமையாளர், எயார் கொமடோர் லலித் ஜயவீரவினது சுகாதார சேவையின் பங்குடன் இறுதி நாள் சான்றிதழ் வழங்கும் விழாவும் நடைபெற்றது.

மேஜர் ஜெனரல் ஜேம்ஸ் ஈபர்ட் அவர்கள் மற்றும் எயார் வைஸ் மார்ஷல் சாகர கொடகதெனிய அவர்களினால் இந்த சான்றிதழ்  வழங்கப்பட்டது.

இதனிடையே இறுதி நாள் நிகழ்வாக, அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள வான்படைத்தளம் அருகே வானில் இருந்து பொதிகளைத் தரையிறக்கும் ஒத்திகை ஒன்றும் நேற்றுக்காலை நிகழ்த்தப்பட்டது. அமெரிக்க விமானப்படையின் C-130J விமானத்தில் இருந்து பொதிகள் தரையிறக்கப்பட்டிருந்தன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts: