அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு இலங்கை முதலீடுகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு!

Friday, August 19th, 2016

நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு இலங்கை அழைப்பு விடுத்துள்ளது

அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ச டி சில்வாவிற்கும் அமெரிக்க அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். இந்த விஜயத்தின் போது பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா, அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் உள்ளிட்டவர்களை  சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பின் போது  நல்லிணக்க செயற்பாடுகளின் முன்னேற்றம்  தொடர்பிலும் பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா தெளிவுபடுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Related posts: