அமரர் மைக்கல் லூட் பத்மதர்ஷனுக்கு இறுதி அஞ்சலி!

image-0-02-06-f0baae5feda8358d692ab73ea68df79a7c100708a2278fd4863dbd4e9f890111-V Tuesday, December 13th, 2016

அமரர் மைக்கல் லூட் பத்மதர்ஷனுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஜேர்மன் பிராந்திய அமைப்பாளர் மாட்டின் ஜெயா அஞ்சலி செலுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு, அதிகார் வீதியைச் சேர்ந்த அமரர் மைக்கல் லூட் பத்மதர்ஷன் (பேபி) நேற்றைய தினம் அகால மரணமடைந்தார்.

இல.03, அதிகார் வீதியிலுள்ள அன்னாரது இல்லத்தில் இன்று மாலை இடம்பெற்ற அடக்க ஆராதனையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் கட்சியின் ஜேர்மன் பிராந்திய அமைப்பாளர் மாட்டின் ஜெயா அவர்கள் கலந்துகொண்டு அவரது பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும், ஆறுதல்களையும் தெரிவித்துள்ளார்.

அமரர் மைக்கல் லூட் பத்மதர்ஷன் மட்டக்களப்பு சிற்றி சென்றர் பணியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

image-0-02-06-f0baae5feda8358d692ab73ea68df79a7c100708a2278fd4863dbd4e9f890111-V

image-0-02-06-57ce718af096ce062e782a69c1432926ce3cf211520405b123670b272fc40f57-V