அபிவிருத்தி உத்தியோகத்தர்க்கான வினைத்திறமைகாண் பரீட்சைக்கு விண்ணப்பம்!

Thursday, November 15th, 2018

வடக்கு மாகாண பொதுச் சேவையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம் 3 மற்றும் தரம் 2 இல் உள்ளவர்களுக்கான முதலாம், இரண்டாம் வினைத் திறமைகாண் தடைப்பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதில் ஓர் உத்தியோகத்தர் வினைத்திறமைகாண் தடைப்பரீட்சை இரண்டிற்கும் ஒரே தடவையில் தோற்ற முடியாது.

முதலாம் வினைத்திறமை காண் தடைப் பரீட்சைக்கு அலுவலக முறைமைகள், கணக்கீட்டு முறைமைகள், கணினிப் பரீட்சை ஆகிய பாடங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது.

இரண்டாவது வினைத்திறமை காண் தடைப்பரீட்சைக்கு தாபன விதிக்கோவை மற்றும் நடைமுறை விதிகள், நிதிப் பிரமாணங்கள் மற்றும் அரச பெறுகை ஆகிய பாடங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது.

தகுதியுடைய விண்ணப்பதாரிகள் தமது விண்ணப்பங்களை தமது திணைக்களத் தலைவர்கள் ஊடாக எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு முன்பதாக செயலாளர், மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழு, வடக்கு மாகாணம், இல.393/48 கோவில் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.

Related posts:

யாழ். வருகைதரவிருக்கும்  ஜனாதிபதியின் பாதுகாப்புத் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் பாதுகாப்பு பிரிவின...
கொடுப்பனவுகள் தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் - அரச பணியாளர்கள் சம்பள கொடுப்பனவுகள் தொடர்பி...
தொழிற் சங்க நடவடிக்கைக்கு மத்தியில் வழக்கமான செயற்பாடுகள் முன்னெடுப்பு - ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவ...