அபிவிருத்திப் பணிகளை நேரில் ஆய்வு செய்த வடமாகாண ஆளுநர்!

maravanpulo 02 Thursday, October 5th, 2017
 
யாழ். தென்மராட்சி தெற்குப் பிரதேசத்தில்  மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும்  அபிவிருத்திப் பணிகளை வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இன்று வியாழக்கிழமை (05) நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
குறித்த பகுதிகளில் காணப்படும் விவசாயக் குளங்கள், வாய்க்கால்கள், மற்றும் கிணறுகள் ஆகியவற்றின் புனரமைப்புப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கைதடி நாவற்குழி தெற்கு கோவிலாக்கண்டிக் குளம், கைதடி நாவற்குழி கிராய்குளம், மறவன்புலோ கிழக்கு  சவரியன் குண்டுக் குளம் அதனோடு இணைந்த வாய்க்கால்கள், செம்மன் குண்டுக் குளம், மறவன்புலோ வடக்கு திரிவிராய்குளம், சின்னத்தூவில் குளம், சட்டநாதர் ஐயா கிணறு உள்ளிட்டவை புனரமைப்புச் செய்வதற்காகவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மழை காலம் நெருங்குவதன் காரணமாக மேற்படி குளங்கள் மற்றும் வாய்கால்களை புனரமைக்கும் பணிகளை துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும், குறித்த பிரதேச கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் கடந்தவாரம் வடமாகாண ஆளுநர் சந்தித்துக் கலந்துரையாடிய போது அறிவுறுத்தியிருந்தார்.
இந்த நிலையிலேயே குறித்த வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக அவர் குறித்த பிரதேசங்களுக்குச் இன்று சென்றுள்ளதுடன் நேரடிக் கள ஆய்வும் மேற்கொண்டுள்ளார்.

இலங்கைக்கு ஆட்கடத்தலுக்கு உள்ளாகும் நேபாளப் பெண்கள்!
யாழ்ப்பாண மூதாதையர்கள் வரலாறு தொடர்பாக தவறான பதிவு குறித்து வடக்கு அமைச்சுக்கு எதுவுமே தெரியாதாம்; ச...
வணிகக் கப்பற்துறை செயலகத்தினால் வழங்கப்படும் சான்றிதழ்கள் கணனி முறையில்!
பாலின் விலையையும் அதிகரிக்க கோரிக்கை!
நாடுகடத்தப்பட்ட இலங்கையர் !