அன்னை தெரஸாவுக்கு புனிதர் பட்டம்!

ரோமன் கத்தோலிக்க பெண் துறவி அன்னை தெரஸாவை போப் பிரான்சிஸ் புனிதராக பிரகடனம் செய்துள்ளார்.
1997 ஆம் ஆண்டு மறைந்த அல்பேனியாவை சேர்ந்த அன்னை தெரஸா, இந்தியாவிலுள்ள கொல்கத்தா மாநகரின் குப்பங்களில் கைவிடப்பட்டோரை பராமரிப்பதற்காக அன்பின் மறைபரப்பு கன்னியர் சபையை வத்திக்கானில் புனித பேதுரு சதுக்கத்தில் கூடிய மக்கள் கூட்டத்தோடு 1,500 வீடில்லாத மக்கள், 13 நாட்டு தலைவர்கள், இந்திய வெளியுறவு அமைச்சர் ஆகியோரும் இணைந்து இந்த நிகழ்வில் பங்கேற்கின்றனர்.
தாங்கள் உருவாக்கிய வறுமையினால் நிகழ்ந்துள்ள குற்றங்களுக்காக உலகத் தலைவர்களை அன்னை தெரஸா தலைகுனிய செய்திருக்கிறார் என்று போப் பிரான்சிஸ் இந்த நிகழ்வின்போது பேசியிருக்கிறார்.அன்னை தெரசா புனிதராக அறிவிக்கப்பட்டதை கேட்டவுடன் இந்தியாவின் கொல்கத்தா மாநகரில் புனித தெரஸாவின் கல்லறையை சுற்றியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர்.
ஏழை இந்துக்களை கிறிஸ்தவர்களாக மத மாற்ற அன்னை தெரஸா முயன்றதாக விமர்சகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
Related posts:
|
|