அன்னாசி மற்றும் வாழை உற்பத்திக்கு நிதியுதவி!

Saturday, March 10th, 2018

இறப்பரை உற்பத்தி செய்வதற்கான காணிகளை அரச இறப்பர் அபிவிருத்தித் திணைக்களத்தின் அனுமதிப்பத்திரத்தின் கீழ் பெற்றுக் கொண்ட உற்பத்தியாளர்களுக்கு நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

அந்தக் காணிகளில் ஊடுபயிராக அன்னாசி அல்லது வாழை உற்பத்திக்காக நிதியுதவி வழங்கப்படவுள்ளது. ஒரு ஏக்கருக்கு நிவாரண உதவியாக 4 ஆயிரம் ரூபா வழங்குவதற்கு பெருந்தோட்டதொழில்துறை அமைச்சு முன்வந்துள்ளது.

இதற்கமைய உற்பத்தியாளர் ஒருவர் இரண்டு ஏக்கர் காணிக்காக 8 ஆயிரம் ரூபா நிதியை பெற்றுக் கொள்ள முடியும்.

Related posts:

இலங்கையின் அமைச்சரவையில் அதிரடி மாற்றம் : சுகாதாரம், கல்வியமைச்சு பொறுப்புகளும் கைமாறின – புதிய அமை...
எரிபொருள் தாங்கிய 3 கப்பல்கள் இன்று நாட்டிற்கு வருகை - வெள்ளிக்கிழமைகளில் சுகாதார சேவையாளர்களுக்கு எ...
சாதாரண தரப் பரீட்சை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் - பரீட்சைகள் ஆணையாளர் ...