அனைத்து மதுபான நிலையங்களுக்கு பூட்டு – இராணுவ தளபதி அதிரடி அறிவிப்பு!

Wednesday, May 12th, 2021

கொரோனா தொற்று பரவலை கருத்திற்கொண்டு அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் தினமும் மாலை 6 மணிக்குள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நேற்றுமுதல் குறித்த உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக  இராணுவ தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலமையை கட்டுப்படுத்தும் நோக்குடன் மக்கள் நடமாட்டத்தைக் குறைக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத மதுக்கடைகள் தொடர்பாக இறுக்கமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Related posts: