அனைத்து பயணிகள் போக்குவரத்து சேவை பேருந்துகளிலும் சிசிடிவி கெமராக்களை பொருத்த நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவிப்பு!

அனைத்து பயணிகள் போக்குவரத்து சேவை பேருந்துகளிலும் சிசிடிவி கெமராக்களை பொருத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அத்துடன் இது தொடர்பில் எதிர்காலத்தில் அனைத்து மாகாண ஆளுநர்களுக்கும் அறிவிக்கப்படும்.
இதேவேளை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு அறிவிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுப் பயணிகள் போக்குவரத்துச் சேவைகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் வகையில் கெமராக்கள் பொருத்துவதன் மூலம் ஓரளவிற்கு குறைக்க எதிர்பார்க்கிறோம்.
இதனால் பயணிகள் போக்குவரத்து சேவை பேருந்துகளுக்கு வழங்கப்படும் வருடாந்த அனுமதிப்பத்திரத்தில் கெமராக்கள் பொருத்துவது உரிம நிபந்தனையாக உள்ளடக்குவது தொடர்பில் பொறுப்பான தரப்பினருக்கு பிரேரணையை அனுப்புவதில் கவனம் செலுத்தியுள்ளோம் என கீதா குமாரசிங்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|