அனுமதி இன்றி வீதிகளில் பொருள் பறித்தால் நடவடிக்கை!

Wednesday, June 13th, 2018

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீதிகளில் தனியாரால் அனுமதி இன்றிப் பறிக்கப்படும் கட்டடப் பொருள்களான மணல், கற்கள் போன்றவை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சபையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பல வீதிகளில் அரச திணைக்களங்கள் அல்லாத தனியார் பலர் கற்கள், மணல் போன்ற கட்டடப் பொருள்களை முறையற்ற விதத்தில் வீதிகளில் பறித்துள்ளனர்.

அவ்வாறு வீதிகளில் கட்டடப் பொருள்கள் பறிப்பதாக இருந்தால் சபையிடம் முறையான அனுமதி எடுத்திருக்க வேண்டும். சபையின் அனுமதி எடுக்காது முறையற்ற விதத்தில் வீதிகளில் கட்டடப் பொருள்களை பறிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது எனக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: