அனுமதிப் பத்திரமின்றி முச்சக்கரவண்டியில் ஆடு கொண்டு சென்ற இருவருக்கு அபராதம்

Monday, May 16th, 2016

அனுமதிப் பத்திரமின்றி  முச்சக்கர வண்டியில் ஆடு ஒன்றினைக் கொண்டு சென்ற இருவருக்குத் தலா -5 ஆயிரம் ரூபா அபராதம் விதித்த மல்லாகம் மாவட்ட நீதவான் ஏ .யூட்சன் ஆட்டினைச் சித்திரைவதை செய்து கொண்டு சென்ற குற்றத்துக்காக மேலதிகமாக 2500 ரூபா அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.

கடந்த வாரம் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான ஆடொன்றினைப்  புன்னாலைக் கட்டுவன் பிரதேசத்திலிருந்து கோப்பாய்ப் பிரதேசத்திற்குக் கொண்டு சென்ற இருவரைச் சுன்னாகம் பொலிஸார் கைது செய்தனர்.

குறித்த சந்தேகநபர்களைக் கடந்த வெள்ளிக் கிழமை மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே வழக்கினை விசாரணை செய்த நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

Related posts: