அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் கைது!

Tuesday, February 7th, 2017

அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை உதவிப்பணிப்பாளர் தெரிவித்தார்.

குறித்த மீனவர்கள் அனைவரும் காங்கேசன் துறை கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மீனவர்கள் நெடுந்தீவிற்கு மேற்கே உள்ள கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைதுசெய்யப்பட்ட மீனவர்களை கடற்படையினர் நீரியல்வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உதவிப்பணிப்பாளர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

123

Related posts: