அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்காக வங்கித்தொழில் முறைமையினூடாக வெளிநாட்டுச் செலாவணி – மத்திய வங்கி மீளுறுதிப்படுத்தல்!

Tuesday, May 31st, 2022

இலங்கைக்குப் பொருட்களை இறக்குமதி செய்யும் பட்சத்தில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு திறந்த கணக்குக் கொடுப்பனவு நியதிகள் அல்லது சரக்குக் கணக்கு நியதிகளைப் பயன்படுத்துவதனைக் கட்டுப்படுத்தி, 2022 மே 06ஆம் திகதியிடப்பட்ட 2022ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க கொடுப்பனவு நியதிகள் மீதான இறக்குமதிக் கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகளை 2022 மே 20 தொடக்கம் நடைமுறைக்குவரும் விதத்தில் நிதியமைச்சு வெளியிட்டது.

உள்நாட்டு வங்கித்தொழில் முறைமையில் வெளிநாட்டுச் செலாவணித் திரவத்தன்மை நிலைமைகளை மேம்படுத்தும் பொருட்டு இலங்கை மத்திய வங்கியினாலும் அரசாங்கத்தினாலும் நடைமுறைப்படுத்தப்படுகின்ற ஏனைய பல்வேறு வழிமுறைகளுடன் இவ்வழிமுறை இணைந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: