அதி பாதுகாப்புடன் தயாரிக்கப்பட்ட கணித பாட பரீட்சை வினாத்தாள் வெளிவந்தது!

Wednesday, July 27th, 2016

அதி உயர் பாதுகாப்புடன் தயாரிக்கப்பட்டு வடமேல் மாகாண பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணைப் பரீட்சைக்காக விநியோகிக்கப்பட்ட கணிதப் பாடத்திற்கான பரீட்சை வினாத்தாளின் சில பகுதிகள் தனியார் வகுப்பு நடத்தும் அரச ஆசிரியர் ஒருவருக்கு எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக வடமேல் மாகாண கல்வி அமைச்சர் சந்தியா குமார ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஆனமடு நகரில் நகரில் நடத்தப்பட்டு வரும் தனியார் பிரத்தியேக வகுப்பிலேயே இந்த மாதிரி கணித வினாத்தாள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வருடம் இரண்டாம் தவணைப் பரீட்சைக்கான வினாத்தாள்கள் வடமேல் மாகாண கல்வி அமைச்சினால் வடமேல் மாகாண கல்வி வலயங்கள் ஊடாக அனைத்து பாடசாலைகளுக்கும் விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஆனமடு பிரதேசத்தில் அரச ஆசிரியர் ஒருவரினால் நடத்தப்பட்டு வரும் தனியார் பிரத்தியோக வகுப்பில் கைகளினால் எழுதி பிரதிபண்ணப்பட்ட கணித வினாத்தாள்கள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளில் 6,7,8,9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் தவணைக்கான கணிதப் பாடப் பரீட்சை கடந்த 14 ஆம் திகதி இடம்பெறவிருந்த நிலையில் குறித்த ஆசிரியர் குறித்த கணிதப் பாட வினாத்தாளை கடந்த 9ஆம் திகதி மாணவர்களுக்கு விநியோகம் செய்துள்ளார்.

இவ்வாறு கைகளினால் எழுதப்பட்டு பிரதி பண்ணப்பட்ட வினாத்தாள்களின் சில வினாக்கள் வடமேல் மாகாண கல்வித் தினைக்களத்தினால் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்ட வினாத்தாள்களில் உள்ள வினாக்களை ஒத்திருந்ததாகவும், சில வினாக்களில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டிருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கையினை மேற்கொள்வதாகவும் அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதாகவும் வடமேல் மாகாண கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்

Related posts:


வவுனியா பல்கலைக்கழகம் பிரதேசத்தின் அபிவிருத்திக்காக பாரிய பங்களிப்பை வழங்கும் - பீடாதிபதி மங்களேஸ்வ...
இலங்கையில் டொலர் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது - மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவிப...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கியூபா மற்றும் அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் - 21 ஆம் திகதி ஐக்...