அதிபர் வெற்றிடத்திற்கு விண்ணப்பங்கள் கோரல்!

Thursday, January 10th, 2019

யாழ். வலயத்திற்குட்பட்ட யாழ்.பூம்புகார் அ.த.க. பாடசாலையில் ஏற்பட்டுள்ள அதிபர் வெற்றிடத்திற்கு யாழ். வலயத்தில் கடமையாற்றும் அதிபர் சேவையைச் சேர்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. வேறு வலயங்களைச் சேர்ந்த அதிபர்களும் விண்ணப்பிக்கலாம்.

மேற்படி   வகை 11 பாடசாலைக்கு வகுப்பு 2 ஐச் சேர்ந்த அதிபர்களும் வகுப்பு 2 அதிபர்கள்; விண்ணப்பிக்காத சந்தர்ப்பத்தில் வகுப்பு 3 ஐச் சேர்ந்த அதிபர்களும் தற்போது அதிபர் போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று நியமனத்தை ஏற்றுக்கொண்ட அதிபர் வகுப்பு 3 இனைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

இவ் விண்ணப்பங்கள் நேர்முகப் பரீட்சைக்குழு ஒன்றின் மூலம் பரிசீலிக்கப்பட்டு அதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பப் படிவங்களை யாழ். கல்வி வலயத்தில் பொது நிர்வாகக் கிளையில் பெற்றுப் பூர்த்தி செய்து எதிர்வரும் 23.01.2019 ஆம் திகதிக்கு முன்னர் வலயக் கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு யாழ் வலயக் கல்விப் பணிப்பாளர் சு.சுந்தரசிவம் கேட்டுக்கொண்டுள்ளார்.