அதிபர் பதவிக்கு விண்ணப்பம் கோரல்!

Wednesday, November 22nd, 2017

யாழ்ப்பாணம் வலயத்திற்குட்பட்ட நல்லூர் தெற்கு ஶ்ரீவிக்னேஸ்வரா வித்தியாலயத்தில் ஏற்பட்டுள்ள அதிபர் வெற்றிடத்துக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. வெற்றிடத்துக்கு அதிபர் வகுப்பு ii ஐச் சேர்ந்த அதிபர்கள் விண்ணப்பிக்கலாம்.

அதிபர் வகுப்பு ii ஐச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்காத சந்தர்ப்பத்தில் வகுப்பு iii ஐச் சேர்ந்தவர்களின் விண்ணப்பங்களும் தற்போது அதிபர் போட்டிப் பரீட்சையில் சித்திபெற்று நியமனத்தை ஏற்றுக் கொண்ட அதிபர் வகுப்பு iii ஐச் சேர்ந்தவர்களின் விண்ணப்பங்களும் கவனத்தில் எடுக்கப்படும்.

விண்ணப்பப் படிவங்களை யாழ்ப்பாண கல்வி வலயத்தின் பொது நிர்வாகக் கிளையில் பெற்று பூர்த்தி செய்து எதிர்வரும் டிசம்பர் 5 ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்குமாறு யாழ்ப்பாணக் கல்விவலயப் பணிப்பாளர் ந.தெய்வேந்திரராஜா தெரிவித்துள்ளார்.

Related posts: