அதிபர் சேவையைச் சேர்ந்தோரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!
Wednesday, July 4th, 2018யாழ் வலயத்திற்குட்பட்ட கீழ் குறிப்பிடப்படும் பாடசாலைகளில் ஏற்பட்டுள்ள அதிபர் வெற்றிடங்களுக்கு யாழ் வலயத்தில் கடமையாற்றும் அதிபர் சேவையைச் சேர்ந்தவர்களிடமிருந்தே வகை – 11, வகை – 111 பாடசாலைகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
நிபந்தனைகள்: வகை – 11, பாடசாலைகளுக்கு வகுப்பு 2 ஐச் சேர்ந்த அதிபர்களும் வகுப்பு 2 அதிபர்கள் விண்ணப்பிக்காத சந்தரப்பத்தில் வகுப்பு 3 ஐச் சேர்ந்த அதிபர்களும் விண்ணப்பிக்கலாம்.
வகை -111, பாடசாலைகளுக்கு தற்போது அதிபர் சேவை வகுப்பு 3 இனைச் சேர்ந்த அதிபர்கள், உப அதிபர்கள் விண்ணப்பிக்க முடியும்.
- யா.புனித றோக்ஸ் வித்தியாலயம் – வகை-11
- யா.நீர்வேலி தெற்கு இ.த.க. பாடசாலை வகை-111
விண்ணப்பதாரி ஆகக் குறைந்தது 03 வருட காலமேனும் சேவையாற்றக்கூடிய வயதெல்லை உடையவராக இருப்பதுடன் தற்போது அதிபராகக் கடமையாற்றுபவர்கள் அதே பாடசாலையில் மூன்று வருட சேவைக்காலத்தினை பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
இவ்விண்ணப்பங்கள் நேர்முகப் பரீட்சைக்குழு ஒன்றின் மூலம் பரிசீலிக்கப்பட்டு அதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பப்படிவங்களை யாழ் கல்வி வலயத்தில் பொது நிர்வாகக் கிளையில் பெற்று பூர்த்தி செய்து எதிர்வரும் 17.07.2018 ஆம் திகதிக்கு முன்னர் வலயக் கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு யாழ் வலயக்கல்விப் பணிப்பாளர் சு.சுந்தரசிவம் கேட்டுக்கொண்டுள்ளார்.
Related posts:
|
|