அதிக பணம் அறவிடும் தனியார் சுகாதார நிறுவனங்கள் மீது விசாரணை!.

Saturday, July 16th, 2016

நாட்டில் அதிக பணத்தை அறவிடும் தனியார் சுகாதார நிறுவனங்கள் தொடர்பில் கிடைக்கின்ற முறைப்பாடுகள் குறித்து விசாரணை நடத்தி, அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தனியார் சுகாதார சேவைகளை ஒழுங்குபடுத்தும் சபை தெரிவித்துள்ளது.

சுகாதார சேவைகளுக்கு வட் வரி விலக்களிக்கப்பட்டுள்ள போதிலும், அதிக பணத்தை அறவிடும் தனியார் சுகாதார நிறுவனங்கள் குறித்து ஊடகங்களுக்க கருத்த தெரிவிக்கும் போதே அந்த சபையின் செயலாளர் வைத்தியர் காந்தி ஆரியரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தனியார் வைத்தியசாலைகள், மருத்துவ நிலையங்கள் அல்லது மருத்துவ ஆய்வுகூடங்களில் அதிக பணம் அறவிட்டிருப்பின், அதற்கான பற்றுச்சீட்டுகளின் பிரதிநிதிகளுடன் எழுத்துமூல முறைப்பாட்டை மக்கள் முன்வைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். அதன் பின்னர் முறைப்பாடுகளை ஆராய்ந்து, அதிக பணம் அறவிட்ட தனியார் சுகாதார நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கமுடியும் என்றும் தனியார் சுகாதார சேவைகளை ஒழுங்குபடுத்தும் சபையின் செயலாளர் தெரிவித்தார்

Related posts: