அதிகரித்த மழை :  49 குளங்கள் சேதம்!

Monday, May 23rd, 2016

நாட்டிலேற்பட்ட பலத்த மழை காரணமாக விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்குட்பட்ட 49 குளங்கள் சேதமடைந்துள்ளதாகவும் குருநாகல் மாவட்டத்தில் மட்டும் 19 குளங்கள் சேதமடைந்துள்ளதாகவும் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பிரதானி பிரபாத்வித்தாரண தெரிவித்துள்ளார்.

மேலும் மட்டக்களப்பில் 08 குளங்களும், அம்பாறையில் 09 குளங்களும்,திருகோணமலையில் 03 குளங்களும் புத்தளத்தில் ஒரு குளமும் மொனராகலையில் 3 குளங்களும் மழை காரணமாக சேதமடைந்துள்ளதாகவும் விவசாய அபிவிருத்தின் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பிரதானி பிரபாத் வித்தாரண மேலும் தெரிவித்தள்ளார்.

குளங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட நீரினால் பாரிய அளவில் வௌ்ளப்பெருக்கு ஏற்படவில்லை எனினும் சில பகுதிகள் நீரில் ஓரளவு மூழ்கியதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: