அதிகமாக சிம் அட்டைகளை வாங்க முடியாத வகையில் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை!

Tuesday, September 29th, 2020

ஒருவர் ஐந்து சிம் அட்டைகளை விட அதிகமாக வாங்க முடியாத வகையில் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனடிப்படையில், அனைத்து தொலைபேசி மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களையும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் இணைத்து பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையில் வைக்குமாறும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேறு நபர்களின் பெயரில் மொபைல் போன் சிம்களை வாங்குவதன் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் மோசடிகளைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: