அடுத்த இரண்டு வருடங்களுள் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு தீர்வு -கல்வி அமைச்சர்!

எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு நியமனங்கள் வழங்கப்படும் என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்..
அரசியல்வாதிகளால் எடுக்கப்படும் தன்னிச்சையான செயற்பாடுகள் காரணமாக தற்போது 60,000 ஆசிரியர் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
குருணாகலை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் தற்போது நிலவும் ஆசிரியர் வெற்றிடம் காரணமாக திருகோணமலை அபயபுர ஆரம்பநிலை பாடசாலையின் செயற்பாடுகள் முற்றிலும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
பாடசாலைக்கு ஆசிரியர்களை பெற்றுக்கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமை காரணமாக பெற்றோர் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பாமல் புறக்கணித்து வருவதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
Related posts:
போராட்டத்திற்கு தயாராகும் மருத்துவ உதவியாளர்கள்!
போராட்டத்திற்கு தயாராகும் தொழிற்சங்கங்கள்!
இலங்கைபோன்ற வளர்முக நாடுகளுக்கும் தடுப்பு மருந்துகள் கிடைப்பதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் நடவடிக்கை எடு...
|
|