அடுத்தவாரம் நல்லிணக்கம் தொடர்பிலான இறுதி அறிக்கை அரசாங்கத்திடம் சமர்ப்பிப்பு!

Sunday, October 9th, 2016

நல்லிணக்கம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகளை உள்ளடக்கிய இறுதி அறிக்கை, எதிர்வரும் 15 ஆம் திகதி அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படும் என நல்லிணக்கத்திற்கான செயலணி தெரிவித்துள்ளது.

இந்த இறுதி அறிக்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கவுள்ளதாக நல்லிணக்கத்திற்கான செயலணியின் அங்கத்தவர் காமினி வியன்கொட தெரிவித்தார். நல்லிணக்கத்திற்கான யோசனைகள் அடங்கிய அறிக்கையில் நெறிப்படுத்தல் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த செயலணியின் அங்கத்தவர் கூறினார்.

பிரதேச மட்டத்திலான செயலணிகள் உருவாக்கப்பட்டு, நல்லிணக்கத்திற்கான மக்களின் கருத்துகள் திரட்டப்பட்டதாக செயலணியின் அங்கத்தவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

logo

Related posts: