அச்சுவேலி விவகாரம்: 14 இராணுவத்தினருக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம், அச்சுவேலி பகுதில் இருவர் காணாமற்போன சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள இராணுவ வீரர்கள் 14 பேரும், எதிர்வரும் 21ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண நீதிமன்ற நீதவான் எஸ். சதீஸ்கரன் முன்னிலையில், அவ்வனைவரும் நேற்றுத் திங்கட்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம், மந்துவில் வடக்கு பிரதேசத்தில் வசித்துவந்த செல்வரத்னம் ஜெயசீலன், நாகமணி சௌந்தரராஜன் ஆகிய இருவரும், 1997ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதியன்று காணாமல் போயிருந்தனர்.இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராணுவ வீரர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கட்டளையிட்டார். அதனடிப்படையிலேயே அந்த இராணுவ வீரர்கள் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
அச்சுவேலி இராணுவ முகாமில் இணைக்கப்பட்டிருந்த இராணுவ வீரர்கள் 14 பேரே, இந்த வழக்கில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
Related posts:
|
|