அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைக் கட்டணம் தவிர்ந்து, நிகழ்வுகளுக்காக மாணவர்களிடமிருந்து நிதி அறவிடுவதைத் தவிருங்கள் – கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு!

Sunday, October 2nd, 2022

கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைக் கட்டணம் தவிர்ந்த சிறுவர், ஆசிரியர் தினம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்காக மாணவர்கள் அல்லது பெற்றோர்களிடம் இருந்து நிதி அறவிடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க, பாடசாலை அதிகாரிகளிடம் இந்த விசேட கோரிக்கையை விடுத்துள்ளார்.

பாடசாலைகளில் முறைசாரா வகையில் நிதி அறவிடுவதை தடைசெய்து 2015/5 சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியில் பெற்றோர்கள் இருக்கும் நிலையில், தேவையற்ற சுமைகளை அவர்கள் மீது சுமத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என கூறியுள்ள அவர், குறிப்பாக அதிபர்கள் இவற்றை செயற்படுத்தாமல் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.

அதேவேளை மலையக பாடசாலை ஒன்றில் நிகழ்வு ஒன்றிற்கு பணம் செலுத்தவில்லை என அதிபர் ஒருவர் மாணை மீது மூர்க்கத்தனமான தாக்குதலை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை கடனாக பெற் நடவடிக்கை – இந்தியா செல்கிறார் நிதி அமைச்சர் பசில் - ...
இலங்கைக்கு உணவுப் பாதுகாப்பை மேம்படுத்த 2.5 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை வழங்குகிறது அவுஸ்திரேலிய...
கனடிய உயர்ஸ்தானிகரை நாட்டிலிருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் - நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர...