அகதி அந்தஸ்து பெற முயன்ற ஒருவர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது !

Monday, July 27th, 2020

போலி செய்திகளை அச்சிட்டு அதனூடாக ஜேர்மனியில் அகதி அந்தஸ்து பெற்றுக் கொள்ள முயற்சித்த நபரொருவரை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இவரை தற்போது பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

சந்தேக நபர் இவ்வாறு மூன்று போலியான பத்திரிகைகளை அச்சிட்டுள்ளதுடன் அதில் போலி செய்திகளை உள்ளடக்கியுள்ளமையும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இந்த போலி பத்திரிகையின் ஊடாக தான் அரசியல் பழிவாங்களுக்கு உள்ளாகியிருப்பதாக காண்பித்து ஜேர்மன் நாட்டில் அகதி அந்தஸ்தைப் பெற்றுக் கொள்ள முயற்சித்துள்ளார்.

இவருக்கு ஜேர்மனியிலிருந்த இருவர் உதவி செய்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் சந்தேக நபர் முதலில் ருமேனியா நாட்டுக்கு சென்று பின்னர் அங்கிருந்து ஜேர்மன் செல்வதற்கு எண்ணியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதற்காக அவர் வெளிநாட்டு பயண முகவர் நிலையமொன்றுக்கு கட்டணம் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுகின்றது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Related posts: