35 அடிக்கு மேற்பட்ட நீளமான மீன்பிடி படகுகளுக்கு அரச மானியம் வழங்க நடவடிக்கை – டக்ளஸ் தேவானந்தா ஏற்பாடு!

Friday, February 2nd, 2018
கடந்த வரவு – செலவுத் திட்டத்தில் கடற்றொழில் வளர்ச்சிக்கென ஆழ்கடல் கடற்றொழிலில் ஈடுபடுகின்றவர்களுக்கு 55 அடி நீளமான படகுகளைத் தயாரிக்கும் பொருட்டு, அதன் தயாரிப்பு செலவில் நூற்றுக்கு 50 வீத நிதி மானியத்தை அரசு வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், 35 அடிக்கு மேற்பட்ட நீளம் கொண்ட படகுகளைத் தயாரிப்பதற்கு மேற்படி அரச நிதி மானியத்தைப் பெற்றுத் தர வேண்டும் என்பதே வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களின் வேண்டுகோளாக இருந்த நிலையில், இவ்விடயம் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளரும் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் (02.02.2018.) கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களுடன் தொடர்பு கொண்டு கலந்துரையாடியதன் பயனாக, 35 அடிக்கு மேற்பட்ட நீளம் கொண்ட படகுகளுக்கான அனுமதியையும், அதற்கான தயாரிப்பு செலவில் 50 வீத நிதி மானியத்தையும் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர் மகிந்த அமரவீர, வடக்கின் கடற்றொழிலாளர்கள் தொடர்பில் அக்கறை கொண்டு செயற்பட்டு வருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கோரிக்கைக்கு அமைவாக நிதி அமைச்சுடன் கலந்துரையாடி, 55 அடி நீளமான படககளுக்கு வழங்கப்படுகின்ற மானியத்தை 35 அடிக்கு மேற்பட்ட நீளம் கொண்ட படகுகளுக்கு வழங்க மாற்றங்கள் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

யாழில் கொரோனாவின் இரண்டாவது அலையை தடுப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்துள்ள விஷேட...
வட்டுவாகல் கடற்றொழிலாளர்களின் கோரிக்கைக்கு விரைவில் தீர்வு - கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் உறுதி!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் தேசிய கிராமிய பொருளாதார அபிவிருத்திக் கூட்டம் வவுனியா மாவட்டச் ச...