16 இலட்சத் தடுப்பூசி – வடக்கு கிழக்கில் வாழும் மக்களுக்கு கிடைத்த மிகப்பெரும் பாக்கியமாகவே கருதுகின்றேன் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, July 28th, 2021

இக்கட்டான சூழலில் தேவையானளவு தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றமையானது வடக்கு கிழக்கில் வாழும் 30 வயதிற்கு மேற்பட்ட மக்களுக்கு கிடைத்த மிகப்பெரும் பாக்கியமாகவே கருதுகின்றேன் என தெரிவித்துள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கிடைத்த இந்த பாக்கியத்தை எமது மக்கள் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

சீன மக்கள் குடியரசால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 16 இலட்சம் தடுப்பூசிகள் நேற்றையதினம் அந்நாட்டின் இலங்கைக்கான தூதுவரால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் குறித்த தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச வடக்கு கிழக்கு மாகாண மக்களுக்கு செலுத்தவதற்காக அவற்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளித்திருந்தார்.

இதையடுத்து குறித்த தடுப்பூசிகள் சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பரிந்துரைகளுக்கு அமைய வடக்கு கிழக்கு மாகாணங்களின் அனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் அது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் – வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு போதிய அளவு தடுப்பூசிகள் தரப்படவில்லை என்றும் அதனால் கூடியளவு தடுப்பூசிகளை வழங்குமாறும் நாம் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்திருந்தோம்.

எமது இந்த கோரிக்கைக்கு இணங்க ஜனாதிபதி நேற்றையதினம் சீன அரசாங்கத்தால் வழங்கப்பட்ட குறித்த தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் நிகழ்வில் என்னையும் அழைத்து சீன தூதுவருக்கு அறிமுகப்படுத்தியிருந்தார்.

அத்துடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தான் எமது கடற்தொழில் அமைச்சர் என்றும் இவரே எமது அரசின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களுக்கு பொறுப்பானவர் என்றும் அந்த வகையில் நான் அவரிடமே இந்த தடுப்பூசிகளை கையளிக்கின்றேன் என்று சின தூதருக்கு தெரியப்படுத்தி என்னிடம் அவற்றை கையளித்திருந்தார்.

அந்த வகையில் எமது மக்கள் இதனை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 16 இலட்சம் என்பது சாதாரண ஒன்றல்ல. இது எமது பிரதேசங்களில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்கனவே செலுத்தப்பட்டது. அந்தவகையில் அதன் தொடர்ச்சியாக இதன் செலுத்துகை இன்றிலிருந்து ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வருவதாக பொதுவாக செய்திகள் பரவுகின்றது. அந்த வகையில் எமது மக்கள் இதை சரியாக பயன்படுத்த வேண்டும்.

குறிப்பாக சிலர் குறித்த தடுப்பூசிகளை  நாங்கள் அங்கிருந்து பெற்றுத்தருவோம் இங்கிருந்து பெற்றுத் தருவோம் என்றும் ஆகாயத்திலிருந்து கைய நீட்டினால் உடன் கிடைக்கும் என்று சொல்லி மக்களை ஏமாற்றி வருகின்றார்கள். ஆனால் எமது மக்கள் அந்த குழப்பங்களுக்குள் சிக்காது இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதுடன் அதை அவர்கள் சரியாக பயன்படுத்துவார்கள் என்றும் நம்புகின்றேன் என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அந்த வகையில் எமது மக்களது சார்பாக ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும், சீன மக்கள குடியரசிற்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றியும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் ஆயுதங்கள் மௌனித்திருக்க வேண்டும் - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவான...
குரங்கின் கை பூமாலை பிணத்துக்குக் கூட உதவாது - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
மக்களுக்கு நன்மையளிக்கும் வேலைத்திட்டத்தையே அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது - அமைச்சர் டக்ளஸ் தெரிவி...