வீட்டுத் திட்டத்தை பூர்’த்தி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு தாருங்கள் : டக்ளஸ் எம்பியிடம் புன்னாலைக்கட்டுவன் 30 வீட்டுத் திட்ட பாதிக்கப்பட்ட பயனாளிகள் கோரிக்கை!

Wednesday, September 25th, 2019


வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீடு போதாமை காரணமாக புன்னாலைக்கட்டுவன் 30 வீட்டுத் திட்டம் முழுமையாக்கப்படாது காணப்படுவதால் தாம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் இதற்கான தீர்வுகளை பெற்றுத்தந்து தமது குடும்பங்களை நிம்மதியாக வாழ்வதற்கு வழிவகை செய்து தருமாறும் குறித்த திட்டத்தினால் பாதிக்கப்பட்ட பயனாளிகள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுத்தள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர். இதன்போதே அவர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில் –

கடும் யுத்தம் மற்றும் இதர பல பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்து தற்போது எமது பகுதியில் வாழ்ந்து வரும் எமக்கு நிரந்தர வீட்டுத்திட்டம் வழங்கப்படுவதாக கூறி இந்த திட்டம் வழங்கப்பட்டது. ஆனாலும் மிக வறுமையில் வாழும் எமக்கு அந்த திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட நிதியை கொண்டு வீட்டை முழுமையாக்க முடியாது பெரும் சிரமங்களை நாம் எதிர்கொண்டு வருகின்றோம்.

எமக்கு குறித்த வீட்டுத் திட்டத்தை பூர்த்தி செய்து நாம் நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கான வழிவகைகளை தாங்கள் பெற்றுத்தர வேண்டும் என்று அவர்கள் கோரியிருந்தனர்.

 குறித்த பாதிக்கப்பட்ட பயனாளிகளின் கோரிக்கைக்கு செவிசாய்த்த செயலாளர் நாயகம் துறைசார் தரப்பினருடன் தொடர்புகளை மேற்கொண்டு காலக்கிரமத்தில் தீர்வுகளை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் கட்சியின் வலிகாமம் தெற்கு நிர்வாக செயலாளர் வலன்ரயன் மற்றும் கட்சியின் வலி தெற்கு உதவி நிர்வாக செயலாளர் அரிகரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


ஜனாதிபதியின் விஷேட புத்தாண்டு கொண்டாட்டத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்றுச் சிறப்பிப்...
தீவக கடற்தொழில் வள மேம்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொது அமைப்புகளுடன் ஆராய்வு!
புது மகிழ்வும் புது நிமிர்வும் புத்தாண்டின் வரவாகட்டும் – வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ்!