வவுனியா மாவட்டத்தின் சமூகப் பிரமுகர்கள் – டக்ளஸ் எம்.பி. இடையே விசேட சந்திப்பு!
Saturday, October 19th, 2019வவுனியா மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மாவட்டத்தின் சமூகப் பிரமுகர்களுடன் விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.
வவுனியா மாவட்டத்தின் சமூகப் பிரமுகர்கள் விடுத்த அழைப்பின் பெயரில் குறித்த சந்திப்பு இன்றையதினம் வவுனியா நகர வாடி வீட்டில் நடைபெற்றது.
இதன்போது மாவட்டத்தினதும் அங்கு வாழும் மக்களினதும் தொழில் வாய்ப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக பேசப்பட்டதுடன் அவற்றுக்கான தீர்வுகள் குறித்தும் ஆராயப்பட்டது.
அத்துடன் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் கட்சி ஆதரிக்கும் மகிந்த ராஜபக்ச முன்னிறுத்திய வேட்பாளரான கோட்டபய ராயபக்சவின் வெற்றிக்கு உழைப்பது தொடர்பாகவும் இதன்போது சமூக பிரமுகர்களினால் பிரஸ்தாபிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தொடர்ந்து தாலிக்குளம் ஆத்தியடி விநாயகர் ஆலயத்திலும், பின்னர் 12.15 மணிக்கு மறவன்குளம் மகாலக்சுமி அம்மன் ஆலயத்தடியிலும், மாலை 03.30 மணிக்கு காத்தார் சின்னக்குளம் பொது நோக்கு மண்டபத்திற்கு அருகிலும், பி.ப. 05.00 மணிக்கு பூந்தோட்டம் முன்னாள் நகரசபை உறுப்பினர் பாலசிங்கம் பிரசன்னா அவர்களின் ‘அழகியல்’ தோட்டத்திலும் அப்பகுதி மக்களின் கோரிக்கைக்கு அமைவாக செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மக்களை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|