முள்ளிவாய்க்காலில் புலிகளுக்கு நினைவு சதுக்கம் வேண்டாம் என்கிறது தினக்குரல் பத்திரிகை : இல்லை உயிரிழந்த அனைவரும் நினைவு கூரப்பட வேண்டியவர்கள் என வலியுறுத்துகிறார் டக்ளஸ் எம்.பி.!

Tuesday, August 27th, 2019

வரவுள்ள ஆட்சியில் தனக்கு தமிழ் மக்கள் அதிகளவு அரசியல் அதிகாரத்தை தருவார்களேயானால் நிச்சயமாக முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட சகல மனித உயிர்களுக்கும் மரியாதை செலுத்தும் வகையில் பொதுச் சதுக்கத்தையும் அதற்கான ஒரு நினைவு நாளையும் உருவாக்குவேன் என ஈழ மக்கள் ஜனநாயகக்  கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்றையதினம் நடைபெற்ற  ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

டக்ளஸ் தேவானந்தா அவர்களின் குறித்த கருத்து தொடர்பில் யாழ் தினக்குரல் பத்திரிகையின் செய்தியாளர் யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்பினர் தான் மக்களை கொன்றனர் ஆகவே அவர்களுக்கு ஏன் நினைவு தூபி அமைக்க வேண்டும் இதை ஏற்றுக்கொள்ள முடியாது என வாதிட்டார்.

இதற்கு பதிலளித்த டக்ளஸ் தேவானந்தா அவர்கள் யுத்தத்தில் இரு தரப்பிராலும் மக்கள் தான் அதிகளவில் கொல்லப்பட்டனர். உசுப்பேற்றல்களாலும் விரேதங்களை தூண்டிவிடுவதாலும் எதனையும் சாதிக்க முடியாது. அத்துடன் புலிகள் அமைப்பும் எமது மக்கள் தான் அவர்கள் வேற்றுக் கிரகத்தில் இருந்து வந்தவர்கள் அல்ல . எனவே அவர்களும் நினைவு கூரப்பட வேண்டியவர்களே என சுட்டிக்காட்டினார்.

அத்துடன் இது போன்ற நல்லெண்ண சமிக்ஞைகளே இன நல்லிணக்கத்தை தோற்றுவிக்கும். அதுமட்டுமல்லாது எமது மக்களின் அபிலாசைகள் குறித்து எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெல்லப்போகின்ற கோட்டாபய ராஜபக்ச அவர்களுடன் நாம் மனம் திறந்து பேசியதில் எமக்கு நம்பிக்கை தரும் சமிஞ்ஞைகள் கிடைத்திருக்கின்றன. என்னை நம்புங்கள்! நான் செய்வேன். செய்விப்பேன் என டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பான முழுமையான தகவல்களை அறிந்துகொள்ள கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.

Related posts:

இனப்பிரச்சினைக்கு தீர்வொ ன்றைக் காணவேண்டும் என்பதில் பிரதமர் அவர்களிடம் இருக்கும் தெளிவு மிக உயர்ந்...
அவசர காலச் சட்டம் சிறுபான்மை மக்களுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்தா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. க...
வேட்பாளர்கள் வெல்வதை விட வாக்காளர்கள் வெல்லவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு - டக்ளஸ் எம்.பி!

யுத்தத்தின்போது உயிரிழந்த மக்களை நினைவகூர்வதற்காக நினைவுத்தூபி ஒன்றும் பொதுத் திகதியொன்றும் தீர்மானி...
அதிகாரப் பகிர்விற்கு மாகாணசபை முறைமையை ஓர் ஆரம்பமாகக் கொண்டு  படிப்படியாக முன்னோக்கி நகருங்கள் - செய...
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பூநகரி வலைப்பாடு பிரதேச மக்களது பிரச்சினைகள் தொடர்பில் நேரில் சென்ற...